Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் வரி

T

The Leader Desk

ஜனவரி 3, 2025 • 5:31 AM

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் வரி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
  • இத் தீர்மானமானது அப்பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட் டியுள்ளது.
எழுத்து அளவு:

விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பருப்பு, வெள்ளை சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், ரின் மீன் மற்றும் காய்ந்த மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு (210 சுங்க குறியீடுகள்) விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை மாற்றமில்லாமல் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானமானது அப்பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட் டியுள்ளது.

மேலும், அரிசி, திணை, பயறு, சோளம், மஞ்சள், பழ வகைகள், மீன் மற்றும் கருவாடு போன்ற உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே வரி வீதங்களை அவ்வாறே பேணுவதற்கும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...