Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மாத்தறை சிறைச்சாலை மரணத்தை அடுத்து கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றம்

T

The Leader Desk

ஜனவரி 2, 2025 • 10:07 AM

மாத்தறை சிறைச்சாலை மரணத்தை அடுத்து கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விபத்துக்குள்ளானதை அடுத்து, 54ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, விபத்தில் உயிரிழந்த கைதி, போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டின் பேரில் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகையை செலுத்தாமையால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • காயமடைந்த 11 கைதிகள் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நேற்று (01) இரவு மாத்தறை சிறைச்சாலையின் G மற்றும் F ஆகிய இரண்டு பகுதிகளின் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 12 கைதிகள், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

விபத்துக்குள்ளானதை அடுத்து, 54ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் குறைந்த இடவசதி இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால், G மற்றும் F பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த கைதி, போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டின் பேரில் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகையை செலுத்தாமையால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலையின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருவதாகவும்  மங்கள வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த 11 கைதிகள் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) இரவு மாத்தறை சிறைச்சாலையின் G மற்றும் F ஆகிய இரண்டு பகுதிகளின் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 12 கைதிகள், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...