Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

18 வருடங்களின் பின் நியூசிலாந்தில் வென்ற இலங்கை

T

The Leader Desk

ஜனவரி 2, 2025 • 6:05 AM

18 வருடங்களின் பின் நியூசிலாந்தில் வென்ற இலங்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டி-20 போட்டியில், இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
  • இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
  • துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
  • பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
எழுத்து அளவு:

டி-20 போட்டியில், இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Nelsonயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும், நுவன் துஷாரா, மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

எனினும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி  2 - 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.

இந்த வெற்றியின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

கடைசியாக 2006,ல் நியூசிலாந்தில் டி20யில் வெற்றி பெற்றது. மேலும், நியூசிலாந்தில் இது இரண்டாவது டி20 வெற்றியாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...