Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

போக்குவரத்து முறைப்பாடுகளை இனி உடன் வழங்க e-Traffic

T

The Leader Desk

ஜனவரி 1, 2025 • 11:50 AM

போக்குவரத்து முறைப்பாடுகளை இனி உடன் வழங்க e-Traffic

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மொபைல் ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, இந்த கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
  • நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர்.
எழுத்து அளவு:

மொபைல் ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, இந்த கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த மொபைல் செயலி மூலம், பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து முறைகேடுகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-servicesஐ அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம், உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். மேலும், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம், தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்ளிகேஷனில் உள்ள Camera option icon அல்லது Video option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பிற சாலை தொடர்பான சம்பவங்களை, பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறாக வழங்கப்பட்ட தகவல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை பொலிஸ் தலைமையகம் விசாரணை செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பும்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...