Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

T

The Leader Desk

ஜனவரி 1, 2025 • 8:34 AM

காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...