Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘LTTEக்கும் மஹிந்தவுக்கும் இடையே நெருங்கிய தொடர்ப்பு இருந்தது’

T

The Leader Desk

ஜனவரி 1, 2025 • 8:21 AM

‘LTTEக்கும் மஹிந்தவுக்கும் இடையே நெருங்கிய தொடர்ப்பு இருந்தது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்போவதாக கூறினார்.
  • “யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவத் தளபதியான எனது பாதுகாப்பு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது.
  • “மஹிந்த ராஜபக்ஷ மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
  • ஆகவே, அவருக்கு 30 பொலிஸாரை பாதுகாப்புக்காக வழங்குவது போதுமானதாக அமையும்” என, சரத் பொன்சேகா மேலும் குறப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்போவதாக கூறினார். விடுதலைg; புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெ நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“யுத்த காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை. பயங்கரவாதிகள் எவரும் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவும், குண்டுத் தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை. இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா?

“யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவத் தளபதியான எனது பாதுகாப்பு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா? என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது, அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினரும் இருந்தனர்.

“பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு, சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா? சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி, என் அருகில் அமர்ந்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஷ, 'பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்' என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது.

“விடுதலை புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

“ட்ரோனர் கருவி ஊடாக மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது. ஏனெனில், மிக் விமானத்தைக் காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஆகவே, அவருக்கு 30 பொலிஸாரை பாதுகாப்புக்காக வழங்குவது போதுமானதாக அமையும்” என, சரத் பொன்சேகா மேலும் குறப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...