(சமீர் ஹாஸ்மி)

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பிறகு, அங்கு தாக்குதல் மற்றும் சித்ரவதை

போன்றவற்றை பாதுகாப்பு படையினர் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து கேட்டறிந்த பிபிசியிடம், தாங்கள் லத்திகள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும், தங்களுக்கு மின்சார அதிர்ச்சி தரப்பட்டதாகவும் பல கிராமவாசிகள் தெரிவித்தனர்.பல கிராமங்களில் மக்கள் தங்களின் காயங்களை என்னிடம் காட்டினார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிபிசியால் அதிகாரிகளிடம் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த குற்றச்சாட்டுகளை ''ஆதாரமற்றவை மற்றும் மெய்ப்பிக்கப்படாதவை'' என்று இந்திய ராணுவம் கூறுகிறது.கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை திரும்பப்பெரும் முடிவை அரசு எடுத்தபிறகு, மூன்று வாரங்களுக்கு மேலாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காஷ்மீரை முடக்கியுள்ளது.இந்த பிராந்தியத்தில் பல ஆயிரக்கணக்காண கூடுதல் துருப்புகள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 

மேலும் அரசியல் தலைவர்கள், வணிகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டுக்காவலிலும் உள்ளனர்.இதில் பலர் மாநிலத்துக்கு வெளியேயுள்ள மற்ற சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கைளை காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது கூட்டாட்சிக்கு கீழ் வரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இங்கு நிலவும் பிரிவினைவாத கிளர்ச்சிக்கு எதிராக இந்திய ராணுவம் போராடி வருகிறது.இந்த பிராந்தியத்தில் தீவிரவாதிகளை ஆதரிப்பதன் மூலம் பாகிஸ்தான் வன்முறையை தூண்டுவிடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டிவருகிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியை நிர்வகிக்கும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.370-வது சட்டப்பிரிவை நீக்கும் அரசின் முடிவை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வரவேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதியின் தைரியமான இந்த முடிவை அவர்கள் பாராட்டுகின்றனர். நாட்டில் உள்ள பிரதான ஊடகங்கள் அரசின் இந்த முடிவை பரவலாக ஆதரித்துள்ளன.(நன்றி பிபிஸி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி