Feature

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு

Feature

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல்

Feature

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுவே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாடாக இருந்தது என்ற எம்.பி மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

“இந்த ஜனாதிபதிக்கு எதிரணி தலைவர் சஜித், முன்னாள் ஜனாதிபதி மகிந்த, ஜேவிபி தலைவர் அனுர ஆகியோரது 13ம் திருத்தம் தொடர்பான சாதகமான நிலைப்பாடு இருக்கிறது. அதைக்கூட அமுல் செய்ய அவர் தயங்குகிறார்.

“வடகிழக்கு தமிழ் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய மூன்று தரப்புகள் இப்போது இலங்கை பிரச்சினை தொடர்பில் இருக்கின்றன. இது கடந்த கால சமாதான பேச்சுவார்த்தை சூழலின் பின் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். ஆகவே இப்போது இந்த மூன்று தரப்புடனும் தனித்தனியாக பேசும்படியும், அதன்பின் சர்வ கட்சி மாநாட்டை நடத்தும்படியும், ஜனாதிபதிக்கு ஆலோசனையும் கூறுங்கள், என நான் அவரிடம் கூறினேன்.

“இதை அனைத்து தமிழ் பேசும் கட்சிகளும் ஆமோதிக்கிறீர்களா என செயலாளர் விக்டோரியா நுலாந் எம்மிடம் வினவினார். இந்நிலையில் அனைத்து தமிழ் பேசும் கட்சி பிரதிநிதிகளும் இந்நிலைப்பாட்டை ஆதரித்து, அனைவரிடமும் பேச சொல்லுங்கள் என்று கூட்டாக அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியாவிடம் தெரிவித்தன.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் இந்த நிலைபாடுகளை ஜனாதிபதிக்கு, நாடு திரும்பும் முன் தெரிவிப்பதாக அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்த் எம்மிடம் உறுதியளித்தார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை படிபடியாக ஆராய்ந்து தீர்வு காணும் செயன்முறை அமுலாக வேண்டும். அதற்கு அமெரிக்கா துணை இருக்கும் என ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் எம்மிடம் கூறினார்.

இதேவேளை, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.

இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரோடு நேற்று முன்தினம் இரவு 10.10 மணியளவில் புதுடில்லியில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Victoria-ranil-700x375.jpg

Feature

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள்

Feature

மாகாண முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரங்களை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எனவே

Feature

புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என

Feature

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்

Feature

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக

Feature

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள்

Feature

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின்

Feature

"அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழ்ப் பிரதிநிதிகளைப் பேச்சு மேசைக்கு அழைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும்

Feature

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை

Feature

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில்,

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி