Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

X-Press Pearl தீ விபத்து: மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளது

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2022 • 12:29 PM

X-Press Pearl தீ விபத்து: மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்காக குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால், இலங்கைக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
  • இதன் பிரகாரம் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள 15,032 மீனவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
  • இதற்கு முன்னரும் குறித்த காப்புறுதி நிறுவனத்தினால் இரண்டு தடவைகள் இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 3480 இலட்சம் ரூபா மற்றும் 3350 இலட்சம் ரூபா மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குரிய பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்காக குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால், இலங்கைக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதன் பிரகாரம் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள 15,032 மீனவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த காப்புறுதி நிறுவனத்தினால் இரண்டு தடவைகள் இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 3480 இலட்சம் ரூபா மற்றும் 3350 இலட்சம் ரூபா மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குரிய பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும், அவர்களின் கப்பல் வகை, மீன்பிடிக்கும் முறை மற்றும் இழந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் 80,000 ரூபா முதல் 2,40,000 ரூபா வரை நட்டஈட்டுத் தொகை கிடைக்கும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

X-Press Pearl கப்பல் விபத்திற்குள்ளானதன் பின்னர் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பிற்காகவும், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீன்களைப் பிடித்து உட்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்கவும் நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையால் சுமார் 15,032 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...