Tamil Leader News
முக்கியம்
17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●
செய்திகள்

பொலிஸ் STF இணைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் லலித் பிந்து மரணம்!

T

The Leader Desk

ஜூலை 18, 2021 • 6:51 AM

பொலிஸ் STF இணைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் லலித் பிந்து மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீதுவ பேஸ்லைன் வீதியில் உள்ள அமந்தொலுவ​ பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
  • பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன, நேற்று இரவு (17) பொலிசாருக்கும் எஸ்.டி.எஃப் இற்கும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
  • இறந்தவர் சீதுவயில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சீதுவ பேஸ்லைன் வீதியில் உள்ள அமந்தொலுவ​ பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன, நேற்று இரவு (17) பொலிசாருக்கும் எஸ்.டி.எஃப் இற்கும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் இருந்த ஒருவர் காயமடைந்து நீகொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.

இறந்தவர் சீதுவயில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு முதல் சீதுவ, வத்தல, மாத்தர, அகுரெஸ்ஸ, கட்டுநாயக்க மற்றும் ராகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த பல குற்றங்கள் மற்றும் ஆறு கொலைகளுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மேலும் இரண்டு பேர் காருக்குள் இருந்ததாகவும், சம்பவ இடத்தில் ஒரு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...