Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் SJB கையெழுத்து

T

The Leader Desk

ஜூலை 20, 2023 • 3:28 PM

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் SJB கையெழுத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (20) ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.
  • அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயன்படுத்தியதால் எமது நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.
  • அதேபோல்,ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதற்கு ஒரு காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (20) ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.

அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயன்படுத்தியதால் எமது நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அறிவுறுத்திய போதிலும், அதைப் பொருட்படுத்தாது அவசர நிலை எனக் கருதி கொள்முதல் மற்றும் பதிவு செயல்முறைக்கு புறம்பாக மருந்துப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதோடு, இதனால் நாட்டின் பல முக்கிய மருத்துவமனைகளில் உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த உண்மைகளை வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (20) கைச்சாத்திடப்படுகிறது என்றும், மக்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேபோல்,ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதற்கு ஒரு காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...