Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முன்னைய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும்; சஜித் பிரேமதாச IMF பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 2:18 AM

முன்னைய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும்; சஜித் பிரேமதாச IMF பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சஜித் பிரேமதாசவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (22) கொழும்பில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

சஜித் பிரேமதாசவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (22) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உயர் மட்டக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர், துணைப் பிரதானி திருபதி Katsiaryna Svirydzenka, வதிவிடப் பிரதிநிதி திருமதி மார்த்தா வோல்டெமிகல் மற்றும் வதிவிட பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 
 
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இங்கு இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
 
தற்போது மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் இருப்பதால், முன்னைய அரசாங்கம் கையெழுத்திட்ட IMF ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, மக்கள் சார் உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். 
 
இதற்கு முன்னதாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ​​சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் பலர் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பல சந்தர்ப்பங்களில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். 
 
இந்தக் கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷன ராஜகருணா, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கென்னடி குணவர்தன மற்றும் பொருளியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முன்னைய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும்; சஜித் பிரேமதாச IMF பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் | Tamil Leader | We Lead the Nation