Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?

Menaka

Menaka

நவம்பர் 12, 2026 • 10:41 AM

6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC), சுதந்திர தொலைக்காட்சி சேவை (ITN) மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து பதிவு செய்துள்ள மொத்த வரிக்கு முந்திய நட்டம் 271 மில்லியன் ரூபாவாகும்.
  • நிதி அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைய, 2024 ஆம் ஆண்டில் இந்த மூன்று நிறுவனங்களின் ஒட்டுமொத்தச் சுத்த நட்டம் 420 மில்லியன் ரூபாவாக இருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் அது 332 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்தது.
  • இன் முழு வருட நட்டத்தில் 87% க்கும் அதிகமான பகுதி இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே பதிவாகியிருப்பது கடுமையான ஒரு நிலையாகும்.
  • இன் முதலாம் அரையாண்டில் 227.
எழுத்து அளவு:

நாட்டின் பிரதான அரச நிறுவனங்கள் இலாபமடையும் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் பிரதான அரச மின்னணு ஊடக நிறுவனங்கள் மூன்றும் மில்லியன் கணக்கில் நட்டமடைந்து வருவதாக நிதி, பொருளாதார மேம்பாடு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் புதிய செயல்திறன் தரவுகள் காட்டுகின்றன.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC), சுதந்திர தொலைக்காட்சி சேவை (ITN) மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து பதிவு செய்துள்ள மொத்த வரிக்கு முந்திய நட்டம் 271 மில்லியன் ரூபாவாகும். பொதுச் சேவைக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மைப் பொறுப்புக்கூறல் குறித்து இந்தப் புள்ளிவிபரங்கள் கடுமையான கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன.

அரச ஊடக நிறுவனங்களின் நிதி வீழ்ச்சி எத்தகையது?

நிதி அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைய, 2024 ஆம் ஆண்டில் இந்த மூன்று நிறுவனங்களின் ஒட்டுமொத்தச் சுத்த நட்டம் 420 மில்லியன் ரூபாவாக இருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் அது 332 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த மூன்று நிறுவனங்களும் 271 மில்லியன் ரூபா சுத்த நட்டத்தைப் பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தின் வரிக்கு முந்திய நிதிச் செயல்திறன் பின்வருமாறு அமைகிறது:

  • இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC): 2024 ஆம் ஆண்டில் 247 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2025 ஆம் ஆண்டில் 191 மில்லியன் ரூபா நட்டத்தையும் பெற்ற ரூபவாஹினி கூட்டுத்தாபனம், 2026 இன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 166 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2025 இன் முழு வருட நட்டத்தில் 87% க்கும் அதிகமான பகுதி இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே பதிவாகியிருப்பது கடுமையான ஒரு நிலையாகும்.

  • சுதந்திர தொலைக்காட்சி சேவை (ITN): 2024 இல் 3 மில்லியன் ரூபா மற்றும் 2025 இல் 62 மில்லியன் ரூபா லாபத்தைப் பெற்று ஒருவித ஸ்திரத்தன்மையைக் காட்டிய ITN நிறுவனம், 2026 இன் முதலாம் அரையாண்டில் மீண்டும் 37 மில்லியன் ரூபா நட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC): 2024 இல் 176 மில்லியன் ரூபாவாகவும், 2025 இல் 203 மில்லியன் ரூபாவாகவும் தொடர்ச்சியாக நட்டமடைந்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 2026 இன் முதல் ஆறு மாதங்களில் மேலும் 68 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

ஏனைய அரச நிறுவனங்கள் லாபமடையும் போது ஊடக நிறுவனங்கள் தோல்வியடைந்ததேன்?

ஏனைய பிரதான அரச நிறுவனங்களின் முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பின்டைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 2025 இன் முதலாம் அரையாண்டில் 227.8 பில்லியன் ரூபாவாக இருந்த பிரதான அரச நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம், 2026 இன் முதலாம் அரையாண்டாகும் போது 259.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அரச வங்கிகளும் பிரதான வர்த்தக நிறுவனங்களும் இவ்வாறு லாபமடைவதிலிருந்து புலப்படுவது 'அரச உரிமையாண்மை' என்பது நட்டமடைவதற்கான காரணமல்ல என்பதாகும்.

2025 ஆம் ஆண்டில் லாபமடைந்த ITN நிறுவனம் கூட 2026 இல் நட்டமடைந்ததற்கும், ஏனைய நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதற்கும் பிரதான காரணங்கள் பல தாக்கம் செலுத்தியுள்ளன:

  • பார்வையாளர்களின் நம்பிக்கை மற்றும் விளம்பர வருமானம் குறைவடைதல்: தற்போதைய அரசாங்களின் பிரசார இயந்திரங்களாக மாறுவதன் காரணமாகப் பொதுவான பார்வையாளர்கள் அரச ஊடகங்களிலிருந்து விலகிச் செல்வதும், அதன் காரணமாகத் தனியார் துறையின் வணிக விளம்பர வருமானம் வீழ்ச்சியடைவதும் பிரதான பிரச்சினையாகும்.

  • அதிகரித்த இயக்க மற்றும் ஊழியர் செலவு: தனியார் ஊடக நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது காணப்படும் அதிகப்படியான ஊழியர்களின் எண்ணிக்கையும் அதற்காகச் செலவிடப்படும் சம்பளம் மற்றும் படிகளுக்கான செலவும் நிறுவனங்களின் வருமானத்தால் தாங்க முடியாத மட்டத்தில் உள்ளது.

  • போட்டித்தன்மைக்கு முகங்கொடுக்க முடியாமை: தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் புதிய டிஜிட்டல் ஊடக தளங்களுடன் போட்டியிடக்கூடிய வகையிலான கவரும் தன்மையைக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் தவறியமை.

தீர்வு என்ன? எதிர்வரும் சவால்கள் யாவை?

தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னால் உள்ள பிரதான சவாலானது, ஊடகச் சுதந்திரத்திற்குப் பங்கமாக்காத வகையில் இந்த நிறுவனங்களை நிதி ரீதியாக ஸ்திரமான நிறுவனங்களாக மாற்றுவதாகும். பொருளாதார மற்றும் ஊடக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போன்று அதற்காகப் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

  • முறையான இயக்கத் தணிக்கை: மேலாண்மைச் செலவுகள், ஆட்சேர்ப்புகள், நிகழ்ச்சித் தயாரிப்புச் செலவு மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை விளம்பரத் தொகைகள் குறித்து முழுமையான மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளுதல்.

  • இலக்கு வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல்: ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக நிதிப் புத்துயிர் பெறுவதற்கான இலக்குகளை வழங்கி, அவற்றை நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தொடர்ச்சியாக அறிக்கைப்படுத்தல்.

  • டிஜிட்டல் நவீனமயமாக்கல்: பார்வையாளர்கள் டிஜிட்டல் தளங்களை நோக்கி வேகமாக ஈர்க்கப்பட்டுவரும் பின்னணியில், பழைய வணிக முறைமைகளுக்குப் பதிலாக நவீன உள்ளடக்கங்கள் (Content) மற்றும் டிஜிட்டல் விளம்பர வியூகங்களை அறிமுகப்படுத்தல்.

அரச ஊடக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றாலும், நிறுவனங்களின் திறமையின்மைக்காக வரி செலுத்தும் மக்களின் பணத்தை என்றென்றும் செலவிட முடியாது.

271 மில்லியன் ரூபா நட்டம் என்பது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; முறையான மேலாண்மையும் சுதந்திரமும் இல்லாவிட்டால் அரச சொத்துக்கள் பொதுமக்களுக்குச் சுமையாக மாறும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...