Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

GoHomeGota போராட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களை கண்காணிக்கும் பொலிஸார்!

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2022 • 2:57 PM

GoHomeGota போராட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களை கண்காணிக்கும் பொலிஸார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
  • அச்சமடைந்த உறவினர்கள், இருவரின் இருப்பிடம் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
  • இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனப்படும் குழுவொன்று மட்டக்களப்பில் உள்ள இரண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனப்படும் குழுவொன்று மட்டக்களப்பில் உள்ள இரண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

GoHomeGota போராட்டம் தொடர்பான தகவல்களையும் கருத்துக்களையும் முகநூலில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளித்து நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக மட்டக்களப்பு ஊடகக் கழகத்தின் தலைவர் எஸ்.நிலாந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அச்சமடைந்த உறவினர்கள், இருவரின் இருப்பிடம் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நாளாந்தம் செய்தியாக்கி, அவற்றிற்குத் தீவிரமாகப் பங்களிக்கும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொலிஸாரால் இவ்வாறான துன்புறுத்தல்கள் எதுவும் மேற்கொண்டதாக இதுவரை செய்திகள் வெளியாக வில்லை.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...