Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

EPF ஊழல் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மௌனம்: தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 13, 2024 • 10:57 AM

EPF ஊழல் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மௌனம்: தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
  • நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர் நலன்புரி அமைப்புகளின் நிதியைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து அதிகாரிகள் மௌனக் கொள்கையைப் பின்பற்றுவதாக தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் தொழிற்சங்கப் பிரதிநிதி அன்டன் மார்கஸ் (12) கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
  • லட்சம் தொழிலாளர்களின் 4 டிரில்லியன் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
  • அங்கு அவர் மேலும் கூறியதாவது: தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் 14 தொழிற்சங்கங்கள் தற்போது 27 லட்சம் ஊழியர்களின் ஊழியர் நலன்புரி நிதியைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பல விடயங்களை முன்வைக்கின்றன.
எழுத்து அளவு:

இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர் நலன்புரி அமைப்புகளின்  நிதியைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட  முன்மொழிவு குறித்து அதிகாரிகள் மௌனக் கொள்கையைப் பின்பற்றுவதாக தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் தொழிற்சங்கப் பிரதிநிதி அன்டன் மார்கஸ் (12) கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

27 லட்சம் தொழிலாளர்களின் 4 டிரில்லியன் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பான கடிதம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடம் இருந்து பதில் கிடைக்காமை குறித்து மத்திய வங்கி ஆளுநரை நேரில் சென்று கேட்டறிய முயன்றும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் 14 தொழிற்சங்கங்கள் தற்போது 27 லட்சம் ஊழியர்களின் ஊழியர் நலன்புரி நிதியைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பல விடயங்களை முன்வைக்கின்றன.

நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காததால்  இந்த கடிதத்தை அனுப்பினோம். ஆனால் அதற்கும் இதுவரை பதில் இல்லை.

இதற்கான சரியான பதில் கிடைக்கும் வரை இலட்சக்கணக்கான தபால் அட்டைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு  அனுப்பி இதற்கு எதிராக செயற்பட தயாராக உள்ளோம்  என்றார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...