இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பில்லியனரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ்க்குமிடையில்

கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது டுபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டின் போது இன்று (3) இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்பமண்டல மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இலங்கையின் பசுமை முயற்சிகள் குறித்து பில் கேட்ஸிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி