இலங்கையில் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காகத் தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய
ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச தர நிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்பசட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இதற்கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.