திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ், க.பொ.த சாதரணதர பரீட்சையில் தேசிய

ரீதியில் 6ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, அவரது கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மேலும், மாணவியின் வேண்டுகோளின் பேரில் பாடசாலைக்கு பல நாட்களாக நிலுவையில் இருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது.

sen_4.jpeg

sen_3.jpeg

sen_2.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி