எதிர்வரும் நான்கு (04) மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு (04) மாதகாலத்திற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய M/s Petrochina International (Singapore) Pte. Ltd. இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி