பதுளை, யூரிவத்த பிரதேசத்தின் மாப்பாகல பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ பரவியுள்ளது.

நேற்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 07 குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், பதுளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயினால் 09  குடும்பங்களை சேர்ந்த சுமார் 50 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி