மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில்  ஏற்பட்ட தீ பரவல்

காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அனைத்திலும் தீ பரவிய நிலையில் அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

தொடர்ந்து வீசிய காற்று காரணமாக அருகருகில் இருந்த காடுகளுக்கும் தீ பரவல் அடைந்தது.

இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையின் தொடர் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உரிய தீயணைப்பு பிரிவு காணப்படமையால் வவுனியா தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அனைத்து எரிந்து அணையும் வரை தீயணைப்பு சேவை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி