உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசியல் ஆதாயம் மற்றும் சேறு பூசும் பிரசாரங்களிலிருந்து விடுபட்ட முற்போக்கான,

மேம்பட்ட தீர்வே தேவை என்றும், உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த உண்மையில் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் என்றும், 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் வாக்குறுதியளித்த பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என்றும், மகா சங்கத்தினர் தலைமையிலான சமயத் தலைவர்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும் அரசாங்கம் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்றும், தற்போது அனைத்தும் பொய்யாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை கைது செய்ய ஆணை கிடைத்த நாள் முதல் இன்று வரை தகவல்களை மறைப்பதும் ஏமாற்றுவதுமே இடம்பெற்று வந்துள்ளதாகவும், தாம் சர்வதேச விசாரணைக்கு விரும்பமில்லை என்றாலும், இது குழப்பமாகிவிட்டதால், முறையான சர்வதேச விசாரணையின் மூலம்தான் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும் என நம்புவதாகவும், 2019 இல் ஆணைப் பெற்ற ஆட்சியாளர்கள் 220 இலட்சம் பேர் விரக்தியில் இருக்கும் இந்த நேரத்தில், வதந்திகளுக்குள் நம்மை மட்டுப்படுத்த முடியாது என்றும், இதனோடு தொடர்புடைய சகலருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த மன்னிப்பும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது, ​நாட்டின் பாடசாலை கட்டமைப்பு போதைப்பொருள் வியாபாரிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த போதைப்பொருள் பயங்கரவாதம் தற்போது நாட்டில் செயற்பட்டு வருவதாகவும்,இது குறித்து அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முதுகெலும்பில்லாத நாடு அல்ல என்றும், 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நாட்டில் புதிய முறையில் இந்த மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருட் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தென்னிலங்கை பிக்குகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (10) நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023 முதல் 8 மாதங்களில் ஐந்நூற்று அறுபத்து மூவாயிரத்து நானூறு கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், யானை - மனித மோதல் காரணமாக 2021, 2022 இல் யானை வேலி அமைக்க 228 கோடி ரூபாய் செலவிடப்பட்டாலும், கடந்த 5 ஆண்டுகளில் 1,867 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 618 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நாட்டில் தற்போது மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி இல்லை என்றும், இதன் காரணமாக ஆபிரிக்கா செல்ல முடியாத 5000 பேர் வரிசையில் நிற்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கைவராலும், சோபனத்தாலும், வாய்மொழியான பௌத்தத்தாலும் பௌத்தத்தை நம் நாட்டில் பாதுகாக்க முடியாது என்றும், பௌத்தம் பூவுலகில் யதார்த்தமாக இருக்க நடைமுறை பௌத்தராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியானதைச் செய்து, தவறுகளையும் குறைகளையும் குறைத்துக்கொண்டு சரியான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை புரட்டிப் போட்டு அரச அதிகாரமோ, பதவி அதிகாரமோ இல்லாமல் புத்தர் போதித்த உன்னத அறிவுரைகளைப் பின்பற்றி தற்போதைய எதிர்க்கட்சி சில பணிகளை ஆற்றியுள்ளதாகவும், திரு.கண்ணன்காரா இலவசக் கல்விச் சிந்தனையை மேலும் முன்னெடுத்துச் செல்ல 3,692 இலட்சம் செலவளித்து 76 பாடசாலை பஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன என்றும்,களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு 77 ஆவது பஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் மூலம் 33 பாடசாலைகளுக்கு 290 இலட்சம் ரூபா செலவில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறையை மேம்படுத்த மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் வெளிப்படத்தன்மை கொண்ட முறையில் செயல்படுத்தப்பட்டு, கொமிஸ், இலஞ்சம், ஊழல் இல்லாது நடைமுறைப்படுத்துவதாகவும், அனைத்தும் திறந்த முறையில் செய்யப்படுவதால், இந்த முறைகளை அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும்,நாட்டை ஆள்பவன் மக்களுக்கு முண்ணுதாரனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் தேவையில்லை என்றும்,அதிகாரம் இல்லாவிட்டாலும் எவ்வாறு வேலை செய்வது என்பதை காட்டியுள்ளதாகவும்,இதை மேற்கொள்ளும் போது பல்வேறு திட்டுகளை கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தல் தோல்வியடைந்த நாளிலிருந்து,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குணநலன்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும், ரணசிங்க பிரேமதாச கூறியது போல்,இறுதியில் உண்மை வெல்லும் என்றும், நாடு வங்குரோத்தான பின்னரே இந்த உண்மை வென்றுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மரியாதை கிடைத்தவுடன் அந்த மரியாதையை அழிக்க பலவிதமான பழிகள் வரும் என்றும்,புத்த பகவான் கூறியது போல், நான்கு திசைகளிலிருந்தும் வீசும் காற்றின் நடுவில் ஒரு பெரிய திடமான பாறை அசையாது இருப்பது போல் நல்லொழுக்கமுள்ள மற்றும் புத்திசாலிகள் அனைவரும் பழி மற்றும் புகழ் வரும் போது அசையாது முகம் கொடுக்க வேண்டும் என்றும், தவறு செய்யும் போது தோற்றுப் போகும் போதும் அமைதியான மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இவை எல்லாவற்றின் போதும் அமைதியான மனதோடும் நல்ல பண்புடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி