ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்திக்கு
ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததன் பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி குருநாகல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் அரசாங்கத்தில் இருந்து விலகி உத்தர லங்கா கூட்டணியில் இணைந்து செயற்பட்ட அவர் நேற்று (04) ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.