நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29)

மூடப்பட்டுள்ளது.

பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதாக பாடசாலையின் அதிபர் தாமரா குமாரி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

மருத்துவரின் அறிவுரைக்கு அமைய மருந்துகளை பயன்படுத்தி உண்ணிகளை அழிக்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு பாடசாலை மூடப்படுவதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்