விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும்  187 வழி எண் சொகுசு பேருந்தின் சாரதிகள் நேற்று (26) முதல் பேருந்து

சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

கட்டுநாயக்க 18ஆவது மைல்கல்  சந்தியில் பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு  மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்தமையே இதற்குக் காரணம்.

விமான நிலையம் - கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக  பயணிக்கின்றன.

விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக  நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் அந்த பேரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல  தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

18வது மைல்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சொகுசு பேருந்துகளின் வருவாய் குறைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அனைத்து காரணங்களையும் முன்னிறுத்தி  நேற்று முதல் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி