1200 x 80 DMirror

 
 

தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நேற்றைய (22) நிலவரப்படி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களின் அளவு

51,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 51,479.89 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சபையினால் நேற்று (22) வரை தயாரிக்கப்பட்ட பயிர் சேத மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்ட தினசரி அறிக்கை இன்று (23) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ், நெல் பயிர்ச்செய்கை செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 45,678 ஆகவும், இதர பயிர்கள் சேதம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 394 ஆகவும் உள்ளது.

நெல் மற்றும் இதர பயிர்கள் சேதமடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 46,072 ஆகும்.

நேற்றைய நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர் சேதம் பதிவாகியுள்ளதுமன் அதன் அளவு 24,647.92 ஏக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 29,472 ஆகும்.

இரண்டாவதாக 14,067 ஏக்கர் பரப்பளான பயிர்ச்சேதம் உடவளையில் பதிவாகியுள்ளதுடன் அங்கு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 5867 ஆகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1898.25   ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 1787  விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 699.75 ஏக்கர் நெற்செய்கை சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 320 ஆகும். 

அநுராதபுரம் மாவட்டத்தில் 336.20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்ததுடன் 292 விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வரட்சி காரணமாக எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் வகையில் அமைச்சரவை குறிப்பொன்றை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி