துணை மருத்துவ சேவைகள் தொடர்பான 05 தொழிற்சங்கங்களுக்கு சொந்தமான சுகாதார பணிக்குழாமினர் நாளை (24) அடையாள

வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

துணை மருத்துவ சேவைகள் தொடர்பான 05 தொழிற்சங்கங்கள் நாளை காலை 08:00 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி வரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக நிபுணர்கள், மருந்தாளுநர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் ஆகிய ஐந்து தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. தமது 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இந்த கோரிக்கைகளில் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்குவதில் தொடர்ச்சியான தாமதம் உள்ளடங்கியுள்ளது. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையின் காரணமாக CT சோதனைகள், எக்ஸ்ரே சோதனைகள், MRI சோதனைகள், ஆய்வக சோதனை சேவைகள், மருந்து விநியோகம், என அனைத்து சேவைகளும் முடங்கும் என்றார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி