இலங்கையின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையிலான பல சம்பவங்கள்

அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது தொடர்பில் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள எமது அமைப்பு, நாட்டின் சமாதானத்திற்கும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றோம். எமது தாய்நாட்டில் மீண்டும் இரத்த ஆறுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கைக்கும் வார்த்தை அளவில் கூட இணக்கம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இந்த நாட்டின் நலனை கருதியும், நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனை கருதியும் நாம் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

ஆன்மீக போதனைகளை அடிப்படையாக கொண்டிருக்கும் மார்க்கங்கள் மகத்துவமாக கருதும் அனைத்து மதச் சின்னங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான புனித சொத்துக்களாகும். அவை குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ சொந்தமான பௌதீக வளங்கள் அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மேலும் தொல்லியல் சார்ந்த பெறுமதியுடைய சின்னங்கள், கட்டமைப்புகள், வளையங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் உலக மரபுரிமைகளாக கருத வேண்டும்.

ஒரு நாட்டின் பெருமை அல்லது மதத்தின் மகத்துவம் என்பன அவற்றின் ஊடாக உலகுக்கு பெற்றுக் கொடுக்கும் நன்மைகளையும் வழிகாட்டல்களையும் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. அடிப்படைவாத, ஆதிக்க சிந்தனையுடைய, அச்சுறுத்துகின்ற அனைத்து செயற்பாடுகளினாலும் அவற்றின் மகத்துவம் இழிவுபடுத்தப்படுகின்றது. ஆகையால் தனது மதத்திற்கும், பிறந்த நாட்டிற்கும், தனது கலாச்சார விழுமியங்களுக்கும் உண்மையான அன்பு கொண்டவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். தனது மதத்திற்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் எவ்விதத்திலும் இழிவு ஏற்படாதவாறு செயற்பட்டு, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உரித்தாக்குவதை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கரு ஜயசூரிய
தலைவர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி