கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப்

பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிநாடு செல்லும் தரப்பினரிடம் இருந்து பட்டப்படிப்பிற்காக அரசாங்கம் செலவிடும் தொகையை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி