நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்கள் என கூறி வர்த்தகர்களுக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்து பண மோசடியில் ஈடுபடும்

சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பொருட்களில் பிரச்சனைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அழைப்புகளை மேற்கொண்ட மோசடியாளர்கள், தாம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் எனக் கூறி, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் அத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கோரியுள்ளனர்.

இதன் காரணமாக, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அத்தகைய அழைப்பு வந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தமது சபைக்கோ தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறான அழைப்புகள் தொடர்பான தகவல்களை நுகர்வோர் அதிகாரசபையின் 1977, 0112 445 897, 0771 088 922 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என மேற்படி அதிகார சபையின் தலைவர்  சாந்த நிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி