மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிரதேசத்தில் 21 வயதுடைய குழந்தையின் தாயார் ஒருவர் அவரது கணவனை

விடுத்து 22 இளைஞன் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (14) உத்தரவிட்டார்.

குறித்த பெண் சிறுவயதாக இருக்கும் போது இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் முடித்து இருவரும் கணவன் மனைவியாக  வாழ்ந்து வந்துள்ள நிலையில், அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

இந்த நிலையில் கணவருக்கு தொழில் வாய்ப்பு இல்லாததையடுத்து அவர் வேலைவாய்ப்பு பெற்று மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று அண்மையில் நாடு திரும்பி வந்த நிலையில், குறித்த பெண் அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டவந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பல தடைவை அந்த இளைஞனுடன் தொடர்பு வேண்டாம் என கணவர் தெரிவித்து வந்த நிலையில், கணவரையும் குழந்தையையும் கைவிட்டு வீட்டை விட்டு குறித்த இளைஞருடன் இரு தினங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில், பெண்ணுக்கு எதிராக பொலிஸ் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவரை விசாரணைக்கு பொலிஸ் நிலையத்துக்கு சம்பவதினமான நேற்று  வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது விசாரணைக்கு வந்த பெண் குறித்த 22 இளைஞருடன் செல்ல போவதாகவும் தெரிவித்து பொலிசாரை கடமையை செய்யவிடாது அவர்களை தாக்கமுற்பட்டதுடன், பொலிஸ் நிலைய கட்டிட யன்னல் கண்ணாடியை தாக்கியகியதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட பெண் அவரது 3 வயது சிறுகுழந்தையை விட்டு சென்றமை மற்றும் பொலிசார் கடமையை செய்யவிடாது போன்ற பல குற்றச் சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி