பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம்

கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொண்டு பாதகமான காரணிகளை நீக்கி சாதகமான காரணிகளுடன் சமய சேவை, சமூக சேவை மற்றும் முற்போக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் நேற்று (15) காலி மாவட்டத்தை இலக்காக் கொண்டு காலி நகரசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் பத்தாயிரத்து எண்பத்தி ஒன்பதுக்கும் மேற்பட்ட விகாரைகளும், பத்தாயிரத்து பதினெட்டுக்கும் மேற்பட்ட தஹம் அறநெறிப் பாடசாலைகளும் 800 க்கும் மேற்பட்ட பிரிவினாக்களும் உள்ளதாகவும்,ஒவ்வொரு மதஸ்தான நிறுவனங்களின் ஆற்றலை சமய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாற்றும் வகையில் செயல்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியாளர்களின் பணியாற்றுகைகளைப் பார்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை மதிப்பிட வேண்டாம் என மதிப்புக்குரிய மகாசங்கத்தினரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தசராஜ தர்ம கொள்கைகளை மையப்படுத்தி அரசை நிர்வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் சமய அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும், சமய வழிபாட்டுத் தலங்களுக்கு சமய நிதியமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு சன்மார்க்க சமுதாயத்தை உருவாக்க உதவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான மையமாகவும், மத நல்லிணக்கத்திற்கான இடமாகவும், மேம்பட்ட படித்த நவீன தலைமுறையின் இடமாகவும், தொழில்நுட்ப ஆற்றல் வாய்ந்த தலைமுறையினரின் மையமாகவும் மத வழிபாட்டுத் தலங்களை உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நவீனத்துவப் பார்வையின் மூலம், அனைத்துப் விடயப் பரப்புகளுக்குமான கொள்கை வகுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கொள்கை வகுப்பாக்கங்களை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பௌத்த அறநெறிக் கல்வியை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விகாரைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தித் திட்டத்தை வெறுமனே கூறாமல் யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றைமை மிகவும் அவசியம் என்றும்,நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடம் எப்போதும் பாதுகாக்கப்படும் எனவும், ஏனைய மதங்களும் சமயங்களும் பாதுகாப்பாக இருக்க செயற்பட வேண்டும் எனவும், நாட்டில் பிளவு ஏற்பட்டால், நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்றும், அந்தப் பிரிவினையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அனைத்து மக்கள் சமூகங்களும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் செயற்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புத்தசாசன அமைச்சும் புத்தசாசன நிதியமும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நிறுவப்பட்டது என்றும், சகோதர ஏனைய மதங்களை பாதுகாப்பதற்காக தனியான அமைச்சுகளை அவர் நிறுவியதையும் நினைவுகூர்ந்தார்.

மிஹிந்தலை புனித பூமியை 24 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கடித்து வைத்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும், 75 வருடங்களாக அரசியல்வாதிகள் ஆளுங்கட்சியில் இருக்கும் போதுதான் சேவையாற்றினர் என்றும், அவ்வப்போது இருந்த எதிர்க்கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே செயல்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மதத்தின் மீதும் அதன் போதனைகளின் மீதும் உண்மையான அன்பு கொண்ட கட்சியாக செயல்படும் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம் என்றும், பிரபஞ்சம், மூச்சு, சசுணட அருண நிகழ்ச்சிகளால் பேச்சுக்கள் செலயருப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஒரு நிலையான திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரச அதிகாரம் தேவை என்றும், எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்திலும் முறைமை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் ஏன் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை என பலரும் விமர்சிக்கின்றனர் என்றும், திருடர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அச்சத்தாலும், வெட்கத்தாலும் தான் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை என்றும், புதிய ஆணையின்றி நாட்டின் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்றும், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டு கொள்கைகளை மதித்து கொள்கைசார் தூய்மையான பயணத்தை மேற்கொள்ளத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி