1200 x 80 DMirror

 
 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில்

நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், காலிமுகத்திடல் உள்ளிட்ட பல இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிட்ட நீதவான்,  பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கு வேண்டாம் என உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை போராட்டக்காரர்களிடம் கையளிக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் பி அறிக்கையொன்றன் மூலம் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களின் பிரகாரம் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி