அரச   பாடசாலை ஒன்றில் மாணவன்   துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக

நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டார் .

குறித்த வழக்கு நேற்று (7) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியலும்   இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள  பாடசாலை  அதிபரை  தலா  ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்  பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல   அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ள சந்தேக நபர் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி     விளையாட்டு அறையில் வைத்து   மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு  உட்படுத்த முயற்சித்ததாக  தெரிவித்து ஓகஸ்ட்   2 ஆம் திகதி  அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இந்த நிலையில்    தலைமைறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த   ஞாயிற்றுக்கிழமை (6)  மாலை தனது  சட்டத்தரணி ஊடாக  பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார்  நேற்று (07) சம்மாந்துறை நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட  குறித்த மாணவன்   அதிபரிடம்   முறையிட்டுள்ளதுடன்   இரு வாரங்கள் கழிந்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பாடசாலையின்அதிபராக ஏ.அப்துல் கபூர் என்பவரும் உடற்கல்வி ஆசிரியராக 47 வயது மதிக்கத்தக்க ஏ.பைஸர் என்பவரும் செயற்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி