மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலிருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை இரண்டு கிலோ மீற்றர் தூரத்தினை மஸ்கெலியா

சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற சிறுமி 18 நிமிடங்களில் நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த நிகழ்வு  இன்று (31)  இடம்பெற்றது.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று நல்லத்தண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பிரவுண்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த போட்டியினை மஸ்கெலிய மாவட்ட வைத்திய அதிகாரி ஆரம்பித்து வைத்தார். 

இதன் போது குறித்த  சிறுமிக்கு வீதியின் இரு புறங்களிலும் மக்கள் பலத்த ஆரவாரத்தை வழங்கினர்.

பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதனை நடை பயணத்தில் கலந்து கொண்ட சிறுமிக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன் சோழன் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சோழன் இலங்கை கிழைத்தலைவர் யூட் நிமலன் பிரதேச பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன் சஸ்மிதா, எனது தந்தை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்தார். ஆகையால் தானும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் எனது முதலாவது நடை பயண சாதனையை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டதோடு, மலையகத்திலுள்ள ஏனைய சிறுவர்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி