பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ளர்.

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி மதியம் 1:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

தாயார் நாளாந்த கூலி வேலைக்காக சென்ற பொழுது வீட்டில் தந்தையுடன் இருந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். தந்தையார் நித்திரையில் இருந்த பொழுது காணிக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற (மண்) கிணற்றில் விழுந்துள்ளார்.

திடீரென கண் விழித்த தந்தை சிறுவனைக் காணாது தேடியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் சேற்றில் புதைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து சிறுவனை மீட்டு உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது உயிரிழந்துள்ளார்.

சந்திரகுமார் பாதுசன் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி