டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவில் இருந்த குருவியின் படத்தை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தினை rebranding செய்ய

விரும்பிய எலான் மஸ்க், என்ன பெயரை வைக்கலாம் அல்லது என்ன மாற்றம் செய்யலாம் என்று டிவிட்டர் பயனர்களிடம் கருத்து கேட்டார்.

அதில் நபர் ஒருவர் எக்ஸ் என்ற எழுத்து மட்டும் மாற்றினால் போதும் என்று பதிவிட்டார். இது மஸ்குக்கு பிடித்துப் போகவே , டிவிட்டர் கணக்குகளில் நீல நிற டிக் வசதிக்கு அருகில் இருக்கும் குருவி பட இலச்சினைக்கு பதில் எக்ஸ் என்ற எழுத்து மாற்றப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்துக்கு என பிரத்யேகமாக உள்ள பக்கத்திலும் டிவிட்டர் என்ற வார்த்தைக்கு பதிலாக x என்று மாற்றப்பட்டது. மேலும் எக்ஸ் என்ற எழுத்து டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்தின் மீது ஒளிரவிடப்பட்டது. இதேபோன்று x.com என்ற இணைய தள முகவரிக்குள் நுழைந்தால் அது நேரடியாக ட்விட்டருக்கு செல்கிறது.

ட்விட்டர் தளத்தை உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் கைப்பற்றிய பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்ற முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார். தற்போது லோகோவை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் எலோன் மஸ்க்.

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி நடைமுறைக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் அதிகமானோரை த்ரெட்ஸ் ஈர்த்தாலும், தற்போது த்ரெட்ஸ் சற்று தொய்வை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி