போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின் விளைவே தேரர் மீதான தாக்குதலாகும்.



எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.

இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இரவு நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் விமலவீர கருத்தில் தெரிவிக்கையில்,

கடந்த ஜுலை 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தேரர் மீது ஐவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது. தற்போது தாக்குதல் இடம் பெற்று 6 நாட்கள் கடந்தும் கூட பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேரரை தாக்கியவர்கள் என கூறப்படுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்களுக்கு அரசியல் புலம் உள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேரர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தாக்குதல் காரணமாக அமைந்திருக்கின்றது.

பொலிஸார் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனர்,

இதில் தமண பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பு கூற வேண்டியவர். இவர் பாரபட்சமாக உள்ளதாகவே மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.

எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 2 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



-அம்பாறை நிருபர் ஷிஹான்-

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி