பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றுவளைப்பு ஒன்று பொலிஸாரால்

முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்காக பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவரும் பிடியாணை பிறபிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி