பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா தரால்வாவில் உள்ள 'பன்டு கரந்த' அல்லது க்ரூடியா சிலனிக்கா மரம் நேற்று (10) அந்த இடத்தில்

இருந்து அகற்றப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய 15 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மரம் அகற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் வந்த குழுவினர் இருபது நிமிடங்களில் மரத்தை அகற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தனது நிறுவனத்திற்கு தெரியாமல் மரம் அகற்றப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் கம்பஹா தரல்வாவில் அமைந்துள்ள 'பன்டு கரந்த' அல்லது க்ரூடியா சிலனிக்கா மரத்தை அகற்ற திட்டமிடப்பட்டது.

அப்போது, ​​கம்பஹா மாவட்ட வன அதிகாரி தேவானி ஜயதிலக மற்றும் சுற்றாடல் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்று ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எதிர்ப்பினை வௌியிட்டனர்.

"இது ஒரு குற்றமாகும் மரம் காணாமல் போயுள்ளது, விசாரணை தேவை இது சட்டவிரோதமான செயல் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி