Devani Gotaஇயற்கையை பாதுகாக்க அச்சமின்றி எழுந்து நின்ற வன ஜீவராசி திணைக்கள அதிகாரியான தேவானி ஜயதிலகவை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கம்பஹா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இயற்கைக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் குறிப்பிட்ட நீர்கொழும்பு முன்னக்கரைய,புனித நிகுலாசிங்கள கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த காலத்தில் 1.4 ஹெக்ரயராக காணப்பட்ட நீர்கொழும்பு சின்னத்தோட்டம் தீவுப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்திலே தேவானி குறித்த அபிவிருத்தி திட்டத்தினை இயற்கைக்கு பாதகமில்லாத வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அபிவிருத்தியை செய்யுமாறும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட பெண் அதிகாரிக்கு ஜனாதிபதியும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி