தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர்
படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், "மட்டாடர் நகரத்தில் முன்னெச்சரிக்கை இல்லாத வகையில் கடும் சூறாவளியை கொண்டு வந்துள்ளது. இதில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

வடக்கு டெக்சாஸில் உள்ள மோட்லி கவுண்டியின் முக்கிய நகரமான மட்டாடர் நகரில் 600 மக்கள் வசித்து வருகின்றனர். மட்டாடர் மேற்கு பகுதியில் சூறாவளியால் மாடி கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளது. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி