டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியா் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அவா் மேலும் கருத்து தொிவிக்கையில், இன்னும் நாடளாவிய ரீதியில் டெங்கு பரவி வருகின்றது. இது குறைவதை காண முடியவில்லை.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையை எடுத்துக்கொண்டாலும் சுமார் 35 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 7 பேர் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், இந்த நோய் விரைவில் குறையும் என நம்புவது கடினமாக உள்ளது.இதனால் மழையுடனான வானிலை மேலும் பரவி வருவதால், சுற்றுச்சூழலையும், வீட்டுச் சூழலைம் சுத்தமாக வைத்திருக்க மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியா் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதை அவதானிக்க முடியாத நிலையே இதற்கு காரணம் என அதன் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி