பண்டாரகம - பாணந்துறை வீதியின் அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை கிளை வீதியொன்றுக்கு திருப்புவதற்காக வீதியின் நடுவில் நிறுத்தி சமிக்ஞை செய்திருந்த போது, தவறான திசையில் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்து சிசிடிவிகெமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலுபோமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி