இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே
நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது.

இதன் மூலம் 10,500 க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் விமானச் சேவை இன்றுடன் அதன் 100 வது விமானச் சேவையை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடை நிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

இந்த வழித்தடத்திற்கு இடைய இருவழி பயணிகள் போக்குவரத்து டிசம்பர் 12 இல் இருந்து இன்று வரை மொத்தம் 10,500 க்கும் அதிகமாக உள்ளது.

இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் இச் செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறியுள்ளதோடு, அதிகரித்த இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றுள்ளது.

மேலும் வாரத்தில் 4 தடவை இடம்பெற்றுவரும் சேவையை 7 தடவையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி