அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பில் இன்று(07) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
ஆா்ப்பாட்டம் தொடா்பில் சில முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளுக்குள் நுழைய நீதிமன்றால் தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆா்ப்பாட்டம் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனி வீதி ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்வைக்கப்பட்ட சமா்ப்பணங்களை கருத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலாி மாளிகை, பிரதமா் காாியாலயம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம் வரை நுழைவதை தடுத்து இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் இ​ணைப்பாளா் மதுஷான் சந்திரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவா் ஒன்றியத்தின் இணைப்பாளா் கல்வெவ சிறிதா்ம தேரா், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 13 தரப்பினருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி