அரச புலனாய்வுச் சேவையினால் வெளியிடப்பட்டதாக் கூறி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கையை நிராகரிப்பதாக பொலிஸ் தலைமையகம்

தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி புலனாய்வுச் சேவையினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அரச புலனாய்வு அறிக்கை என்று இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.

அரச புலனாய்வுச் சேவை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் எந்த ஒரு நிறுவனமும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்பில் எந்தவித கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கவனம் ஜனாதிபதி தோ்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடாத்துவதிலேயே உள்ளதாகவும், பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதே பொலிஸாரின் முக்கிய பணிகாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான போலியான அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்துவதற்காக இவ்விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.a

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி