கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த கிருஸ்ணகுமார் விக்னேஸ்வரன் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். நிருபர் பிரதீபன்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி