பஸ் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு ரயில் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான சட்டங்களை திருத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"ரயில்வே திணைக்களத்தில் 2021 ஆண்டின் மொத்த வருவாய் 2.6 பில்லியன்களாகும். 2.3 பில்லியன் மேலதிக கொடுப்பனவு. சம்பளத்திற்காக 7 பில்லியன். அதனால் கடந்த ஆண்டுகளில் 10 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட, இந்த நிறுவனத்தின் திறமையின்மையை அகற்ற ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது, அவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அதற்காக டிக்கெட், ஆசன முன்பதிவு போன்றவற்றை மூன்று மாதங்களுக்குள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவோம் என நம்புகிறோம். அதன் பிறகு, கட்டணத்தை சரிசெய்ய வேண்டும். ரயில் கட்டணத்தை பேருந்து கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதற்கான கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு திணைக்களமாக முடிவெடுப்பது மிகவும் கடினம். இதன் காரணமாக, அமைப்பு செயல்திறனைப் பேணுவதற்கு திணைக்களம் அமைப்பிலிருந்து விலக வேண்டும். எனவே, 2001 மற்றும் 2002ல் ஒரு அதிகார சபையை உருவாக்குவதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவைக்கேற்ப மறுபரிசீலனை செய்ய அதனை வழங்குவேன். நாட்டின் எதிர்காலத்திற்காக இதற்கு உறுதுணையாக இருங்கள்..."

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி