இராணுவ வீரர்களை நினைவு கூறும் 14வது தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக 14வது தடவையாக தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள அதேவேளை, அமைச்சர்கள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய இராணுவ வீரர்களை கொண்டாடும் வகையில் இன்று பாராளுமன்றத்தை சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடும் விசேட போக்குவரத்து ஒழுங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன் நேரடி ஒளிபரப்பை ரிவி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகளின் ஊடாக பார்க்கலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி